ஆறாம் திணை – மருத்துவர் கு.சிவராமன்

எந்த நாடுகள் பாரம்பரிய உணவை உட்கொள்கிறதோ அவற்றின் குடி மக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று மருத்துவ புள்ளவிவரங்கள் தெரிவிக்கின்றன என்று சிவராமன் இரண்டு , மூன்று இடத்தில் குறிப்பிடுகிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்

விகடன் வெளியிட்டுள்ள இந்த புத்தகம், ஆரோக்கியமான உணவு பற்றி யோசிக்கும் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

தமிழர்களின் உணவுப்பழக்கங்கள் எப்படி இருந்தன….நம் தாளிப்பு முறை இப்போது இருப்பது போல் இல்லாமல் திரிதோஷ சமபொருட்களாய் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு , மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் என்று இந்த எட்டு பொருட்கள் தாளிக்க பயன்படுத்தப்பட்டதை கூறியிருக்கிறார்.

நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி உண்பார்தம் பேருரைக்கிற் போமே பிணி

Plastic பொருட்களில் சமையல் செய்தவற்றை சூடான உணவு பானங்கள், பதார்த்தங்கள் போன்றவற்றை பயன்படுத்தும் போது plastic உருகி வெளியேறும் benzene, டையாக்ஸின் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு காரணமாக அமைவதை கூறியிருக்கிறார். மல்லிகைப்பூ இட்லியை பார்த்து மயங்கி விட வேண்டாம் அதற்கு பதில் சத்தான இட்லியாக Polyphenol, பீட்டா கரோட்டின் நிறைந்த தினை இட்லி, கருப்பு உளுந்து இட்லி, கைக்குத்தல் மாப்பிள்ளைச்சம்பா சிகப்பரிசி என சத்தான option களை அதன் செய்முறையோடு அடுக்குக்கியிருக்கிறார். கேழ்வரகில் உள்ள ‘மித்தியானைன்’ எவ்வளவு சிறப்பானது, இதனால் மூட்டு வலியை தவிர்க்கவும், வயோதிகத்தை கட்டுப்படுத்தவும் , தோல், நகம், முடியின் அழகை காப்பாற்றவும், ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட முடியும் எனக்கூறியிருக்கிறார். Snacks,FAST FOOD மற்றும் மேற்கத்திய Junk foods க்கு மாற்றாக பல தமிழர் பாரம்பரிய உணவுகள் செய்முறையோடு விளக்கியிருக்கிறார்.

 1. கேழ்வரகு லட்டு
 2. சிவப்பு அவல் + வெல்லம்
 3. உளுத்தங்களி
 4. வெந்தயக்களி
 5. கேழ்வரகு உப்மா
 6. குதிரை வாலி குழம்பு சோறு
 7. தினை பாயசம்
 8. தினையரசி இட்லி
 9. கைக்குத்தல் அரிசி இட்லி
 10. சோளப்பணியாரம்
 11. வரகுப்புளியோதரை
 12. குதிரை வாலிப்பொங்கல்
 13. இலைக் கொழுக்கட்டை என அடுக்கியிருக்கிறார்.

கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், கோவைக்காய், பீர்க்கண்காய், வாழைக்காய், பூசணிக்காய் என தமிழர்கள் சாப்பிட்ட காய்கறிகளின் முக்கியத்துவம் சொல்லியிருக்கிறார். குறிப்பாக கத்திரிக்காய் குறைந்த calorie யுடன் அதிக நார்ச்சத்துடன் , குறைந்த glycemic index உடன் உடல் எடை குறைப்புக்கும், Cholesterol குறைப்புக்கும் உதவும் கத்திரிக்காய் உணவல்ல ஊட்ட மருந்து என குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisements

Leave a Reply