சினிமா வியாபாரம் – கேபிள் சங்கர்

சினிமா வியாபாரம் புத்தகம் இரண்டு மாதங்கள் கிடைக்காமல் இருந்தது. சென்னை புத்தக கண்காட்சியில் கிடைத்தது. மதி நிலையம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தில் கேபிள் சங்கர்….சினிமா வியாபாரத்தின் ஆதி முதல் அந்தம் வரை cover செய்திருக்கிறார்.
ஒரு படத்தின் வியாபாரம் தியேட்டரில் release செய்வது மட்டுமில்லாமல்…

 1. உள்நாட்டு satellite உரிமை
 2. வெளிநாட்டு satellite உரிமை
 3. ஆடியோ உரிமை
 4. வீடியோ உரிமை
 5. Internet உரிமை
 6. D.T.H உரிமை
 7. மற்ற மொழிகளுக்கான டப்பிங் உரிமை
 8. மற்ற மொழிகளுக்கான remake உரிமை
 9. உள்நாட்டு Video உரிமை
 10. வெளிநாட்டு Video உரிமை
 11. In flight Audio Video rights என தகவல்களை அள்ளி கொடுத்திருக்கிறார். 60 விதமான உரிமைகள் படத்தை சுற்றி தயாப்பாளரிடம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு தான் அது தெரிவதில்லை என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமா வியாபாரம் மட்டுமின்றி Hollywood சினிமா வியாபாரம் பற்றியும், விநியோகம் முதல் தியேட்டர்கள், multiplex கள் ஒரு புதிய படத்தை வைத்து எப்படி லாபம் சம்பாதிக்கின்றன (Car Parking, Pop corn) என்பது வரை விளக்கியிருக்கிறார். D.T.H சின்ன பட்ஜெட் படங்களுக்கு எப்படி உதவியாக இருக்கிறது, ஒரு காலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையான படத்தின் Cassettes & CDs இப்போது லட்சங்களை கூட தொடாமலிருப்பதன் காரணங்களை அடுக்கியிருக்கிறார்.

ஒளி, ஒலி அமைப்புகள் நம் தியேட்டர்களில் எப்படி இருக்கிறது, இந்தியர்களுக்கு ‘ஒலி’யில் இருக்கும் ஈடுபாடு ‘ஒளி’யில் கிடையாது, அமேரிக்கர்களுக்கு ‘ஒளி’யில் இருக்கும் ஈடுபாடு ‘ஒலி’யில் கிடையாது, இதை எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருக்கிறார்.

நல்ல தியேட்டர்களில் – ஒளி, ஒளி, ஏசி, rest room என அனைத்தும் தரமானதாக உள்ள தியேட்டர்களில் மக்கள் அதிக பணம் கொடுக்க தயங்குவதில்லை என்பதை கூறியிருக்கிறார்.

மொத்தத்தில் சினிமா வியாபாரம் பற்றி தெர்ந்து கொள்ள நினைப்பர்களுக்கு ஒரு Comprehensive Knowledge book ஆக இது இருக்கிறது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.